சாத்தான்குளம் அருகே முதலூர் தூய மிகாவேல் தொடக்கப்பள்ளியில் உணவு கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு முதலூர் சேகரகுருவானவர் செல்வன் மகாராஜா தலைமை வகித்தார். சபை ஊழியர் இமானுவேல் பீட்டர் ஆரம்பம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சேகர பொருளாளரும், தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்த ராஜா ரத்தினராஜ் உணவு கூடத்தை திறந்து வைத்து பேசினார். சேகர செயலாளர் மோசஸ் வரவேற்றார்.
இதில், ஆலய புனரமைப்பு கமிட்டி செயலாளர் ஜான்ராஜ் நாயகம், பொருளாளர் செல்வராஜ், ஆலய கமிட்டி உறுப்பினர் ஜான்சன். ஆசிரியர் பிளாரன்ஸ், உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி லதா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய புனரமைப்பு கமிட்டி துனை செயலாளர், அசனக்கமிட்டி செயலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.