• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே 4 கோவில்களில் ஒரே நாளில் பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது : 3 பவுன் தங்க நகை; 1/2 கிலோ வெள்ளி பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 9ம் தேதி கிராமத்தில் உள்ள 3  கோவில்கள் மற்றும் எட்டயபுரத்தில் உள்ள ஒரு கோவில் ஆகிய 4 கோவில்களில் ஒரே நாளில் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 3  பவுன் தங்க நகை மற்றும் மற்ற சாமி சிலைகளில் உள்ள 1/2 கிலோ எடை கொண்ட வெள்ளி நகை ரூபாய் 18 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

நீராவி புதுப்பட்டி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்புதான்  கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட தங்கம் வெள்ளி நகைகள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதயடுத்து கிராம மக்கள் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், வசந்தி, காவலர்கள் முத்தமிழரசன், சசிகுமார், சிவசங்கரன் ஆகியோர் குழு கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில்,

திருட்டில் ஈடுபட்ட கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சுரேஷ் (25) மற்றும் கோவில்பட்டி கதிரேசன் மலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (25) ஆகிய இருவரையும் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த வெள்ளி தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை மீட்டனர். கைதான இருவரும் செப்டிக் டேங்க்  கிளீன் செய்யும் வேலை செய்து வந்ததாகவும், நீராவி புதுப்பட்டி கிராமத்திற்கு  செப்டிக் டேங்க் கிளீன் செய்ய வந்தபோது, கோவில் திருவிழா நடப்பதை அறிந்து நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

  • Share on

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி - சாத்தான்குளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

முதலூர் பள்ளியில் உணவு கூடம் திறப்பு!

  • Share on