விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதையடுத்து சாத்தான்குளத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமை கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் மகாஇளங்கோ முன்னிலை வகித்தார்.
ஒன்றிய அவைத் தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பாலசிங், ஸ்டேன்லி, வேல்துரை, சரவணன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணகுமார், நகர துணை செயலாளர் வெள்ளப்பாண்டி, ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சதீஷ்குமார், வார்டு செயலாளர்கள் பெருமாள், சுந்தர், டேனியல், கிதிர்முகம்மது, சுடலைமுத்து, நகர முன்னாள் துணை செயலாளர் கணபதி, கிளை செயலாளர் நெல்சன், நகர வர்த்தக அணி பிரபு, ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்சமது, விவசாய அணி ஞானராஜ், ஒன்றிய பிரதிநிதி குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.