சாத்தான்குளம் புதிய கிராம நிர்வாக அலுவலராக சுபாஷ் பொறுபேற்றுக்கொண்டார்.
சாத்தான்குளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கந்தவள்ளிக்குமார் பள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டதையடுத்து நெடுங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ், சாத்தான்குளம் கிராம நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் அரசூர் 2 கிராம் நிர்வாக அலுவலராக சத்தியராஜ், புத்தன்தருவை கிராம நிர்வாக அலுவலராக ஜெஸ்மின் மேரி, நெடுங்குளம் கிராம நிர்வாக அலுவலராக துரைச்சாமி, பழங்குளம் டாலிசுபலா, அரசூர் 1 ஆனந்த், பேய்க்குளம் ராஜபாண்டி, நடுவக்குறிச்சி முத்துக்குமார், கருங்கடல் கருப்பசாமி, சாஸ்தாவிநல்லூர் செந்தில்குமார் ஆகியோர் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டு மாறுதல் பெற்ற இடங்களில் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமுக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.