
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின் புதூரில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி "பிரிவோம் சந்திப்போம் தொடர்வோம்" என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா, சிங்கப்பூர், குவைத், இங்கிலாந்து உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி போன்ற பல்வேறு பெருநகரங்களில் இருந்தும் சுமார் 120 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர்.
கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் முனைவர் சண்முகவேல், முதல்வர் முனைவர் காளிதாச முருகவேல் மற்றும் முன்னாள் மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசகன் ஆகியோர் பங்கேற்று பேசினர். முன்னதாக இறைவணக்கத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் வினோத் வரவேற்றார்.
கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி தாளாளர், இயக்குனர், முதல்வர் மற்றும் துறை பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நிறைவாக முன்னாள் மாணவர் ச.விஜயகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி முன்னாள் மாணவ சங்க தலைவர், முன்னாள் மாணவ சங்க உறுப்பினர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.