ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருகே தெற்கு பேய்க்குளம் முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், சந்தன மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
காலையில் கணபதி ஹோமம் சிறப்பு அலங்கார தீபாரதனை, காலை 9 மணி அளவில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் , முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மதியம் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்தனர்.