• vilasalnews@gmail.com

கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேகம்!

  • Share on

கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேகம்    நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகேஉள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் நல்லதவம் செய்த நாச்சியார் அம்பாள் சமேத  ஸ்ரீவீரபாண்டீஸ்வரர், அருள்தரும்  சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தர்கோயிலில் வருஷாபிஷேக விழா  2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலை சங்கல்பம், மகாகணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, மகா சங்கல்பம், முதல் யாகசாலை வேள்வி, திவ்யாஹீதி, மகா பூர்ணாஹிதி, தீபாராதனை நடைபெற்றது.

2 வது நாளான இன்று காலை 8 மணிக்கு மங்கள வாத்தியம், மகாசங்கல்பம், 2 ஆம் யாக வேள்வி, ஏகாத்சரூத்ர சுக்த துர்கா சுக்த ஜபம், பஞசாட்சரநவாட்சரி, மூலமந்திரயாகம், பரிகார மூர்த்திகளுக்கு மூலமந்திர யாகம், தீபாராதனை, 9 மணிக்கு கடம் பிரகார வலம், தொடர்ந்து அருள்தரும்  நல்லதவம் செய்தநாச்சியார் அம்பாள், சமேத ஸ்ரீவீரபாண்டீஸ்வர்ர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், விமானகலசங்களுக்கும் வருஷாபிஷேக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ர்ந்து, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி உத்திர நடசத்திர விஷேச திரவிய அபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.  தொடர்ந்து அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. வருஷாபிஷேக  பூஜைகளை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர் குமார் சிவாச்சாரியார் நடத்தினார்.

இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் செயல் அலுவலர் சதீஷ், அறங்காவலர்கள் நடராஜபிள்ளை, ரேவதி, வெள்ளக்கண், சுப்பையா,  கட்டாரிமங்கலம் ஊராட்சித் தலைவர் கீதா கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை  அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

  • Share on

கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி பதுக்கல் : 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

தெற்கு பேய்குளம் முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா!

  • Share on