• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் - பொதுமக்களிடம் தாசில்தார் மனுக்களை பெற்றார்!

  • Share on

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில்,  பொதுமக்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்.

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜுலை மாதத்திற்கான சிறப்பு முகாம் 13.07.2024 இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.

அதே போல், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில்,  பொதுமக்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்.


இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்படுகிறது. 

மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.

  • Share on

ஏ.என்.டி கல்வி; மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!

சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on