• vilasalnews@gmail.com

ஏ.என்.டி கல்வி; மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏ.என்.டி கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் 11.07/.2024 நடைபெற்றது.


ஏ.என்.டி அறக்கட்டளையின் தலைவரும் திருவனந்தபுரம் டாக்டர் சாமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துமேலாண்மைக் கல்லூரி முதல்வருமான பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் தலைமையேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினார். 


கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஏ.என்.டி கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் செயலாளர் பாண்டிச்செல்வி, நிவேதா, மதுரை காமராஜ் பல்கலைக்கழக மருத்துவமேலாண் துறை மாணவிகள் உமா மற்றும் பங்கார்லட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். 

பேரா.டாக்டர்.ஜெயராஜசேகர் தயாரித்த "தமிழக பெண்களைத் தாக்கும் இரு புற்றுநோய்கள்" என்ற விழிப்புணர்வு கையேடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட மக்களே... ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ஏ.என்.டி கல்வி; மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!

  • Share on