ஓட்டப்பிடாரம் பஜாரில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் பஜார் பகுதியில் உள்ள டீக்கடை, பலசரக்கு கடை, ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று காலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் முருகராஜ் , சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம், காளிமுத்து, மானக்சா அருணாச்சலம், கங்காதர் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அப்போது, காலாவதியான உணவு பொருள்கள் மற்றும் கேரி பேக்குகள் வைத்திருந்த 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.