• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 15ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது - மாநகராட்சி அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகரில் வருகிற ஜூலை 15ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர்  மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய  பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 15.7.2024 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

எனவே, அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

  • Share on

எப்போதும்வென்றானில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

ஓட்டப்பிடாரம் பஜாரில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு - காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!

  • Share on