• vilasalnews@gmail.com

எப்போதும்வென்றானில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

எப்போதும்வென்றானில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (11.07.2024) நடைபெற்ற அரசு விழாவில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றானில் நடைபெற்ற விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திட்ட முகாம் மற்றும் துறை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுசிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் பஞ்சாயத்து தலைவர் முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; கொலை மிரட்டல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

தூத்துக்குடியில் 15ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது - மாநகராட்சி அறிவிப்பு!

  • Share on