• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; கொலை மிரட்டல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


கடந்த 13.06.2024 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில்  ஈடுபட்ட வழக்கில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சகாய மாதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த இன்னாசிமுத்து மகன் பிரைட் (19) என்பவரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட பிரைட் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசியும்


கடந்த 25.05.2024 அன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமணதோப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மந்திரமூர்த்தி (40) என்பவரை ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட மந்திரமூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்


காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சகாய மாதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த இன்னாசிமுத்து மகன் 1) பிரைட் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வெள்;ர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் 2) மந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

எப்போதும்வென்றானில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on