விளாத்திகுளம் அருகே ஊசிமேசியாபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தினை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஊசிமேசியாபுரம் கிராமத்தில் ஜேஎஸ்டபுள்யூ எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கிழ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.