இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மகேஷ், நகர செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகி கண்ணன் மற்றும் யாதவர் சமுதாய அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.