• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளியில் குக்கர் மூடி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சத்துணவு அமைப்பாளர் காயம்!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்தப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக அதே ஊரைச் சேர்ந்த முருகன் மனைவி கருப்பாயி(45), சமையலர் சக்கம்மாள், சமையல் உதவியாளர் செந்தூர்கனி ஆகியோர் பணி புரிந்து வருகிறார். இந்தநிலையில், இன்று பள்ளி சமையலர் சக்கம்மாள் லீவு போட்டுள்ளார். இதனால் அந்த சமையல் வேலையை சத்துணவு அமைப்பாளர் கருப்பாயி பார்த்துள்ளார். இவருக்கு உதவியாக செந்தூர்கனியும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12 மணிக்கு சத்துணவு அமைப்பாளர் கருப்பாயி குக்கரில் பருப்பு வேக வைத்துக் கொண்டிருந்தார். அப்போது குக்கரில் இருந்து விசில் சத்தம் வந்ததை தொடர்ந்து குக்கரின் விசிலை அனைத்து குக்கரில் இருந்த மேல் மூடிய கழட்டுவதற்கு முற்பட்டுள்ளார். அப்போது குக்கரில் மேல் மூடி தானாக கழன்று கருப்பாயின் முகத்தில் அடித்தது. இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த சத்துணவு அமைப்பாளரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . 

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. மேலும் படுகாயம் அடைந்த சத்துணவு அமைப்பாளரின்  கணவர் முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்னல் தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

சாத்தான்குளம் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் குறித்து பயிற்சி

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் : விளாத்திகுளம் அதிமுகவினர் மரியாதை!

  • Share on