• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் குறித்து பயிற்சி

  • Share on

சாத்தான்குளம் ஒன்றியத்தில்  பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது தொடர்பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்துவது குறித்தும், பொறுப்பாளர்களுக்கு சமையல் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒன்றிய ஆணையாளர் சுரேஷ்  தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பூங்கொடி., கிருஷ்ணகுமாரி, கிறிஸ்டல் ஜெயா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பின்னர் அவர் பேசுகையில், சாத்தான்குளம் ஒன்றியத்தில் 86 பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார். இதில் எந்தெந்த நாட்களில் என்னென்ன உணவு தயார் செய்வது, எப்படி தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

  • Share on

சாத்தான்குளத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளியில் குக்கர் மூடி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சத்துணவு அமைப்பாளர் காயம்!

  • Share on