சாத்தான்குளத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஜமாத்து தலைவர் முகமது சாதிக் தலைமையில் நடந்தது. முகாமில் சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சிகிச்சை குறித்த ஆலோசனைகளை பெற்றனர்.
முகாமில், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, தோல் நோய், குடல் புண், நெஞ்சு எரிச்சல், சிறுநீர்க்கல், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டன. கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.
இம்முகாமில் நலம் மருத்துவமனை பிரபு முருகேசன் வரவேற்றார். நலம் மருத்துவமனை டாக்டர்கள் பிரசாத், அஜய் ராஜா, செந்தில் குமார் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர்.