தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இடைச்சிவிளை மற்றும் அரசூர் பூச்சிக்காடு பகுதியில் நேற்று மாலை இரு ஹெலிகாப்டர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தாழ்வாக சென்ற இரு ஹெலிகாப்டர்களை கண்டு வியந்து பார்த்தனர்.
அதோடு மட்டுமல்லாது தாழ்வாக சென்ற ஹெலிகாப்டர்களை செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த இரு ஹெலிகாப்டர்களும் சாத்தான்குளம் பகுதியில் தொடங்கி குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தின் அருகே சென்று விட்டு திரும்பியுள்ளது.
இதனால் இந்த இரு ஹெலிகாப்டர்களும் ராணுவ ஹெலிகாப்டர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.