கிராமப்புற மாணவிகளின் நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு உடன்குடி பெரியதாழை ஆகிய ஊர்களில் இருந்து சாத்தான்குளம் மகளிர் கல்லூரி வரை மகளிர் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்கு திமுக மற்றும் பொதுமக்கள், மாணவிகள் சார்பிலும் கனிமொழி எம்பியிடம் நன்றியை தெரிவித்த சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர்,
சாத்தான்குளத்தில் இருந்து முதலூர், பொத்தகாலன்விளை, போலையர்புரம், நடுவக்குறிச்சி, தட்டர்மடம் வழியாக உடன்குடிக்கு ஒரு மகளிர் இலவச பேருந்து வசதி செய்து கொடுத்தால் கொம்மடிக்கோட்டை ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிறைகுடியிருப்பு சிவந்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பொதுமக்கள் மிகவும் பயன் அடைவார்கள். ஆகவே, உடன்குடியில் இருந்து பெரியதாழை செல்லும் பேருந்து தடம் எண் 62 எப் பேருந்தை காந்தி நகரில் இருந்து தட்டார்மடம் வரை சென்று வந்தால் இக்கல்லூரி மாணவிகள் மிகவும் பயன் அடைவார்கள்.
திசையன்விளையிலிருந்து தச்சன்விளை, கடக்குளம், கலியன்விளை, பனைவிளை, இடைச்சிவிளை, பூச்சிக்காடு விலக்கு வழியாக சாத்தான்குளம் மகளிர் கல்லூரி வரை புதிய பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் கிராமப்புற மாணவிகள், பொது மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். ஆதலால் இந்த புதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலர் பாலமுருகன் கோரிக்கை அளித்தார். மனுவை பெற்ற கனிமொழி எம்பி , நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.