நாசரேத்தில் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஸ்டேப்ளி தெருவை சேர்ந்தவர் ராஜன் (68). இவர் நாசரேத் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிதுரை (40) என்பவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, தனது வீட்டில் வெளியூரை சேர்ந்த பெண்களை விபச்சாரத்திற்காக தங்க வைத்திருப்பதாகவும், பணம் கொடுத்து விட்டு தன்னுடன் வந்தால் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிதுரை, நாசரேத் போலீசாரிடம் புகார் செய்தார். இதன்பேரில் நாசரேத் காவல் ஆய்வாளர் ஜீன்குமார் தலைமையில் போலீசார் ஸ்டெப்ளி தெருவிலுள்ள ராஜன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த தங்க வைக்கப்பட்டிருந்த நெல்லை டவுன், தூத்துக்குடி மற்றும் நாசரேத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீசார் மீட்டனர். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.