தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவித்தலின்படி தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திர மூர்த்தி கலந்து கொண்டு தனது 51 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சனைகள் அடங்கிய மனுவினை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் வழக்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர், திரு.வி.க நகர், காதர் மீரான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் இன்னும் சரி செய்யாத நிலையில் உள்ளது அதனை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து சரி செய்து தர வேண்டும் எனவும், கனமழையால் அப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை வேண்டியும், தனது 51 வது வார்டுக்கு உட்பட்ட வீரநாயக்கன் தட்டு, முடுக்குகாடு , ஊரணி ஒத்த வீடு, பெரியசாமி நகர், சர்வேயர்காலனிஆகிய பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது எனவே அப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் வரும் அனைத்து திட்டங்களையும் அரசியல் பேதமின்றி இந்த பகுதி மக்களுக்கு விரைந்து முடித்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.