திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த என்.முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான சுப்பிரமணியன் மகன் மற்றும் வேலவன் (39), முருகேசன் மகன் ராஜா (எ) ராஜதுரை (39), கணேசன் மகன் வேல்குமார் (40) மற்றும் ஆறுமுகம் மகன் நதீஷ்குமார் (34) ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று (09.07.2024) மது அருந்தும் போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா (எ) ராஜதுரை, வேல்குமார் மற்றும் நதீஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வேலவனை பீர் பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலவன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து ராஜா (எ) ராஜதுரை, வேல்குமார் மற்றும் நதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.