• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கான திறப்பு விழா... புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா : மார்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு!

  • Share on

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவி மார்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் (2021-2022) ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினையும், குழந்தைநேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று வகுப்பறை கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

அதே போல, சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 


இந்நிகழ்வில், புதூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், பள்ளி தலைமை ஆசிரியை அழகம்மாள், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் எர்ரையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலுச்சாமி, பால்ராஜ், செயலாளர் சுப்புராஜ், முன்னாள் செயலாளர் முத்துப்பாண்டி, புதூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்துராஜ், புதூர் மத்திய ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் சின்னப்பன், ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரர் பொன்ராஜ், 


விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ், கட்சி உறுப்பினர்கள் மருது பாண்டியன், அரசகுமார், ஆகாஷ்பாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

  • Share on

பண்டாரபுரத்தில் சட்டப்பணி குழு விழிப்புணர்வு முகாம்!

மது அருந்தும் போது நண்பர்களுக்குள் தகராறு : பீர் பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது!

  • Share on