சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிக் குழு சார்பாக பண்டாரபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு வழக்கறிஞர்கள் வேணுகோபால், ஈஸ்டர், கமல் ஆகியோர் தலைமை வகித்து சட்டம் குறித்து பேசினர். கூட்டத்தில் பண்டாரபுரம் ஊராட்சி 100 நாள் வேலைத்திட்டதில் பணிபுரியும் பெண்கள் கலந்து கொண்டனர். பணித்தள பொறுப்பாளர் முத்துலட்சுமி வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரசி மற்றும் வட்ட சட்ட பணிக்குழு நிர்வாகிகள் கஸ்தூரி, பெல்சி, மலர்விழி ஆகியோர் செய்து இருந்தனர்.