தாமரைமொழி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது.
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழியில் இருந்து பூவுடையார்புரம் செல்லும் சாலையோரத்தில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
இது குறித்து அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் சீரமைக்கப்படாமல் தொடர்ந்து தண்ணீர் வீணாக சாலைகளில் செல்கிறது என்றும் புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் உடனடியாக கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டுமென கோரிககை விடுத்துள்ளனர்.