• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி கிராமத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே  சந்திரகிரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம் திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர்  மனோரஞ்சிதம் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகுளம்  கண்மாய்களில் இருந்து களிமண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும்  கட்டணமில்லாமல் எடுத்து பயன்பெறுவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், இப்பயிற்சியில் ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு சிவகாமி, வேளாண்மை துறையின் கீழ் உள்ள மாநில திட்டங்களை பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன மானிய திட்டங்களை எடுத்துரைத்தார்.


பின்னர் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்  லலிதா பரணி  மண் பரிசோதனை செய்யும் செய்முறைகளை செயல் விளக்கமாக விவரித்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடம் உதவி வேளாண்மை அலுவலர் சிவா விதைகளை கொள்முதல் செய்யும் வணிகக் கூடங்கள் பற்றி விளக்கினார். பின்னர் அப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர் காளிராஜ்  பண்ணை கருவிகளில் தெளிப்பான் மானியங்கள் பற்றி கூறினார். பயிற்சியின் நிறைவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கபட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வக்குமார், மங்கையர்கரசி செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

விளாத்திகுளம் - குளத்தூர் - சூரங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை ( ஜூலை 11 ) மின்தடை!

  • Share on