திமுக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கலை பிரிவு சார்பாக அதிமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கலை பிரிவு சார்பாக மாவட்ட செயலாளர் போடுசாமி தலைமையில், கள்ளச்சாராயம் மரணங்கள், போதைப் பொருட்கள் கடத்தல், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக்கோருதல் போன்ற வாசகங்கள் அடங்கிய திமுக அரசிற்கு எதிரான துண்டு பிரசுரங்களை, வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின் பேரில் அதிமுகவினர் வழங்கினர்.
இதில், மாவட்ட கலை பிரிவு துணை செயலாளர் கெங்கராஜ், மாவட்ட கலை பிரிவு இணை செயலாளர் அருணாசல வடிவு, நகர்மன்ற உறுப்பினர் செண்பக மூர்த்தி, மகளிர் அணி ஒன்றிய செயாளர் ஜூலியேட் பங்குபாண்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செல்வபாலாஜி, கிளை செயலாளர் பிச்ச முத்து, கொத்தனார் வேல்ராஜ், ஆறுமுகம், மாஸ்டர் காளிராஜ், சின்னதுரை, அங்குசாமி, பங்குப்பாண்டி, விநாயகம், அண்ணா மலை, விக்னேஷ், இல்லுபையூரணி கணேசன், வழக்கறிஞர் மாரீஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.