• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து துண்டு பிரசுரம் - நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் வழங்கினர்!

  • Share on

தமிழக முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கும் விதமாக, பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், எட்டையபுரத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின் பேரில், எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் கள்ளச்சாராயம் மரணங்கள், போதைப் பொருட்கள் கடத்தல், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோருதல் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை எட்டையபுரத்தில் உள்ள கடை வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்   பொதுமக்களுக்கு வழங்கினர்.


இதில் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஜமாபந்தி முடிந்து ஒரு மாதம் ஆன நிலையிலும் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு மனுக்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை - பொதுமக்கள் ஆதங்கம்!

திமுக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் : வடக்கு மாவட்ட அதிமுக கலை பிரிவு சார்பாக பொதுமக்களிடம் வழங்கல்!

  • Share on