• vilasalnews@gmail.com

ஜமாபந்தி முடிந்து ஒரு மாதம் ஆன நிலையிலும் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு மனுக்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை - பொதுமக்கள் ஆதங்கம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் ஜமாபந்தி கடந்த மாதம் 11ஆம் தேதி திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாரன் தலைமையில் தொடங்கி நான்கு  நாட்கள் நடந்தது. ஜமாபந்தியில் 915 மனுக்கள் பெறப்பட்டன. 

இவற்றில் பட்டா மாறுதல் உட்பட 40-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. பிற மனுக்கள் துறை விசாரணைக்குப் பிறகு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்களில் பெரும்பாலானவை பட்டா பெயர் மாற்றம், வரன்முறை பட்டா மற்றும் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.

இதில், பட்டா சம்மந்தமான மனுக்கள் எதற்கும் தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி தாலுகா அலுவலகத்தில் கேட்ட பொழுது பட்டா பிரிவை கவனிக்கும் கிளார்க் விடுப்பில் உள்ளதால் அதை கவனிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் பட்டா வழங்கும் மண்டல துணைத் தாசில்தார் நேற்று முன்தினம் பணி மாற்றம் செய்யப்பட்டு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஜமாபந்தியில் மனு கொடுத்தால் உடனடியாக தீர்வு காணப்படும். எனவேதான் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக அங்கு அளிக்கிறார்கள். ஆனால், ஜமாபந்தியில் கொடுக்கும் மனுக்களுக்கு ஒரு மாதம் கடந்த பின்னரும் தீர்வு காணவில்லை என வேதனைப்படுகிறார்கள் மனு கொடுத்து காத்திருக்கும் பொதுமக்கள். மேலும், வெறும் கண் துடைப்பாகத்தான் ஜமாபந்தி ஆகிவிட்டதா? எனவும் கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், ஜமாபந்தியில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

ஏரல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கியவரை போலீசில் பிடித்து ஒப்படைத்த தாசில்தார்!

எட்டையபுரத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து துண்டு பிரசுரம் - நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் வழங்கினர்!

  • Share on