வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 39 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் 11.7.2024 அன்று சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 314-வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதால், கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 39 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 11.7.2024 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்படி டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட தினத்தில் மேற்படி டாஸ்மாக் மதுபானக் கடையிலிருந்து மதுபான விற்னை, மதுபானத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.