தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி, ஸ்ரீ சந்தன மாரியம்மன், பெருமாள் கோவில் மற்றும் மகா விநாயகர் கோவில் ஆனித் திருவிழா வெகு விமர்சியாக நேற்று முதல் தொடங்கியது.
இந்நிலையில் இன்று முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதியம்புத்தூர் இசக்கி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய பால்குடம் ஊர்வலமானது மேலமடம் பஜார் வழியாக ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி கோவில் வளாகத்தை வந்தடைந்தது. அப்போது மேளதாளத்துடன் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆட்டம் ஆடி அசத்தியபடி பால்குடம் எடுத்துச் செல்லப்பட்டது.