தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பாக தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்களை தவிர்க்க வேண்டியும், கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தியும், சுதேசி கொள்கைகளை கைபிடித்திடவும் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வியாபாரிகள் சங்க மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் கணேசன், சிவக்குமார், வெள்ளத்துரை மற்றும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் , பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன் முடிவில் நன்றி கூறினார்.