வலிப்பு நோய் ஏற்பட்ட உப்பள கங்காணி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தெர்மல் நகர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி காதர் மீரான் நகரை சேர்ந்தவர் ஆண்டவர். இவர் உப்பள கங்காணியாக பணிபுரிந்து வருந்தார். இவர் வலிப்பு நோய் பாதிப்பால் கடந்த ஆறு ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போதும் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் சோபா ஜென்ஸி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் விசாரித்து வருகின்றனர்.