சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள் குளம் காலனியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் சின்னத்துரை. தொழிலாளியான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ஜெயப் பெருமாளுக்கும் முன்விரோதம் உள்ளதாம். இந்த நிலையில் சின்னத்துரை அவரது வீட்டு முன்புள்ள செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் அப்போது ஜெயபெருமாள் அவரை அவதூறாக பேசினாராம்.
இந்த பிரச்சனையில் ஜெயப்பெருமாள் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்னத்துரை போலீசில் புகார் செய்தார். ஆனால் புகாரை பதிவு செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்ய காலதாமதம் செய்து வந்ததால் சின்னத்துரை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு சாத்தான்குளம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் இரண்டு மாதத்திற்கு பிறகு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.