• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் காட்சி பொருளாய் காணப்படும் தண்ணீர் தொட்டி : பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்பொழுது?

  • Share on

சாத்தான்குளம் அண்ணாநகரில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாய் காணப்படும் தண்ணீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் பேரூராட்சி 2 வார்டு பகுதியில் வடக்குரதவீதி அண்ணாநகர் தெருவில் 2 ஆயிரம் கொள்ளளவு   பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி  அமைத்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர்  வழங்கிட கடந்த 5 மாத்திற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆழ்துளை மற்றும்  தண்ணீர்  தொட்டி  அமைக்கப்பட்டது. அதன்பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படாமலும், மின் வசதியும் செய்து கொடுக்கப்படாததால் தண்ணீர் தொட்டி தற்போது காட்சி பொருளாக காணப்படுகிறது. 

அப்பகுதி மக்கள் உள்ளாட்சி பிரதிநிதி மற்றும்  பேரூராட்சி நிர்வாகத்திடம் இது தொடர்பாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை.

ஆகவே, பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் தொட்டி அமைத்துவிட்டு, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், காட்சி பொருளாக கிடக்கும் அவலநிலையை போக்கிவிட்டு, தண்ணீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

சாத்தான்குளம் நீதிமன்றத்தின் முன்பு கருப்பு பேட்ஜ் அணித்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிய தாமதம்... நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வழக்கு பதிவு!

  • Share on