மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணித்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் சிவபாலன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் முருகானந்தம், மணிமாறன், சுடலைமுத்து, சிவா, வேணுகோபால், ஈஸ்டர்கமல், கணேஷ், கோபாலகிருஷ்ணன், சிவமீனா, ஸ்வீட்டி, ஜேம்ஸ்துரை, முத்து கணேஷ், ரோஸ்லின், பால வினிதா, வினோத், ஷில்பா பிரேம்குமார், வசந்த் குமார், ஹாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.