சாத்தான்குளம் பேய்க்குளம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீஸார் பேய்க்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பனைக்குளத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பேய்க்குளம் சங்கரநயினார்புரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் மகாராஜா (23) என்ற இளைஞரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.