சாத்தான்குளம் அருகே லோடு ஆட்டோ கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே கீழஅம்பலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி மகன் கணேஷ் கண்ணன்(28). இவர் ஒலி பெருக்கி வாடகைக்கு விடும் தொழில் செய்துவருகிறார். இதற்கான பொருட்களை கொண்டு கொண்டு செல்ல லோடு ஆட்டோ வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சுமை ஆட்டோவை வீட்டுமுன் நிறுத்திவிட்டு வீட்டில் தூங்க சென்றாராம். அப்போது அதே ஊரைச்சேர்ந்த 2 பேர், முன்விரோத்த்தில் கணேஷ் கண்ணனின் லோடு ஆட்டோ முன் பக்க கண்ணாடியை கல் மற்றும் கம்பால் தாக்கி சேதப்படுத்தி ஓடி விட்டனராம்.
இதுகுறித்து கணேஷ் கண்ணன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.