• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று (4.2.2020 )  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  கொரோனா தடுப்பூசி இன்று (04.02.2021) போட்டுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி ஆகியோர் களும் கோவி ஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 16 முதல் சுகாதார பணியாளர் களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 5 மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது நமது மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனுமதிக்கப் பட்ட 15 மையங்களில் மாவட்டம் முழுவதும் கொரோன தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது மேலும் 2 தனியார் மருத்துவமனை களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தற்போது வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பல்வேறு முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப் பட்டுள்ளது. அதனடிப் படையில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். 

மேலும் மாவட்ட காவல் கண்காணிபாளர், சார் ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைவதற்கு கரோனா தடுப்பூசி போடுவதே முக்கிய தீர்வாகும். 

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கூட அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடப்படுவதற்கு ஆன்லைனில் புகைப்படம் எடுத்து பதிவு செய்யப்படுகிறது. 

கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு சுகாதார துறையின் மூலம் விவரங்கள் அடங்கிய அட்டை வழங்கப்படுகிறது. அதில் பெயர், எந்த விதமான கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோம், அடுத்ததாக 28 நாட்களுக்கு பின்பு எந்த தேதியில் அடுத்த டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விபரம் அந்த அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கு தற்பொழுது வரை 3000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 628 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு தற்பொழுது கரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பின்பு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்ல வேண்டும். 

நமது தூத்துக்குடி மாவட்டத்துக்கு இதுவரை 25000 தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. கூடுதலாக வரவைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்படும். தற்போது அரசின் வழிகாட்டுதலின்படி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

விரைவில்அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி வரப்பெற்ற உடன் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அஜாக்கிரதையாக இல்லாமல் முககவசம், சமூக இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அனைவரும் நலமாக உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவ கண்காணி ப்பாளர் பாவலன், மருத்துக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் குமரன், துணை காவல் கண்காணிப்பாளர் செல்வன் (மதுவிலக்கு), கரோனா தடுப்பூசி செலுத்தும் மைய பொறுப்பு அலுவலர் மாலையம்மாள் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் - சாலை மறியல்

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா

  • Share on