ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் மகன் செல்வமுருகன்(30). இவருக்கு பால சௌந்தரி என்ற மனைவியும் தணிகா ஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று காலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்று விட்டு வருவதாக தனது மனைவி பால சௌந்தரியிடம் கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து அவரது மனைவி பால சௌந்தரி மணியாச்சி காவல் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இதையடுத்து மணியாச்சி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.