• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா - யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப்படி, தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா  ஒட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு ஓட்டப்பிடாரம் கல்வி வட்டாரத்திற்குட்பட்ட 71 ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்.


இதில், வட்டார கல்வி அலுவலர்கள் பவந்தீஸ்வரன், மகாலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி சண்முகராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 10 ஆம் தேதி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்!

ஸ்ரீவைகுண்டம் : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

  • Share on