• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் தகராறு செய்து கொலை முயற்சி : ரவுடி கைது

  • Share on


கோவில்பட்டியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் கடந்த 6.7.2024 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி போஸ்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (எ) குடஞ்சாண் கணேசன் (31) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  

இதனையடுத்து, போலீசார் கணேசன் (எ) குடஞ்சான் கணேசனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

குறுக்கு சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம் - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை!

குளத்தூர் கண்மாயில் வண்டல்/கரிசல் மண் எடுக்க ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!

  • Share on