ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கீழ செய்தலை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளபாண்டியன்( 39). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளபாண்டியன், தேவராஜ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் தேவராஜ் வெள்ளபாண்டியன் மற்றும் குமார் ஆகிய மூவரும் குறுக்கு சாலைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் கீழ செய்தலை திரும்புவதற்காக குறுக்குச்சாலை ஜங்ஷன் பகுதியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது விருதுநகரை சேர்ந்த முகமது நாரிக் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது .இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வெள்ளபாண்டியன், தேவராஜ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.