• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அருகே மலையில் பற்றி எரிந்த தீ - நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது மந்தித்தோப்பு கிராமம். இந்த கிராமத்திலிருந்து பாண்டவர்மங்கலம் செல்லக்கூடிய சாலையில் இருக்கும் மலை பகுதியில் நேற்றிரவு ஆங்காங்கே திடீரென தீப்பிடித்து பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 


இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் அந்த மலைப்பகுதிக்குச் சென்றனர். தீயணைப்புத்துறையினர் வாகனம் மேலே செல்ல முடியாது என்பதால் தீயணைப்புத்துறை வீரர்கள் மலைக்கு மேலே சென்று மலையில் உள்ள செடிகள், இலைதளைகளை வைத்து நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.


அந்த மலைப்பகுதி வனத்துறைக்கான பகுதி என்பதால் தங்களால் வர முடியாது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த மலைப்பகுதி வருவாய் துறைக்கு சொந்தமானது தங்கள் கட்டுப்பாட்டில் வராது என்று கூறி மறுத்துள்ளனர். இப்படி ஒவ்வொரு அரசு துறையும் மாறி மாறி அந்த மலை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறி தீயை அணைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு வழியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் மது போதையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு!

குறுக்கு சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம் - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை!

  • Share on