நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக வரும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக, மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் சக்திவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செவ்வாய்க்கிழமை ( 9ஆம்தேதி) இரவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார். அதன்பின் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தவிளையில் உள்ள மாநில பொதுச் செயலர் டாக்டர் அரசுராஜா இல்லத்தில் தங்குகிறார். அதன்பின் புதன்கிழமை (10ஆம்தேதி) காலை அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று. சுவாமி தரிசனம் செய்து, இயக்க நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.
தொடர்ந்து நெல்லை செல்லும் அவர் நெல்லை புறநகர் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுவதுடன் இயக்க வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். ஆகையால் மாநில தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்து முன்னனி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.