கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் வட மாநில இளைஞர்கள் தங்கியிருந்து பிளாஸ்டிக் பாய் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி இருந்து இளையரசனேந்தல் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அந்த வட மாநில இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் இருந்து பச்சை பாம்பு ஒன்று வெளிவந்து உள்ளது. உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி சாதுரியமாக வாகனத்தின் செயின் பிராக்கெட்டியில் மறைந்து இருந்த பச்சை பாம்பை சாதுரியமாக வெளியே எடுத்து காட்டு பகுதியில் விட்டுச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது