சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை புலிகுளத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், அவரின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ரக் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இது போன்ற தலித் தலைவருக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.