தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, என மூன்று பிரிவுகளாக வண்டி எல்லகை பந்தயம் நடைபெற்றது.
இதில், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 20 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 32 மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு பிரிவில் 69 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.
3-மைல் தூரம் நடைபெற்ற தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை சங்கரபேரி உத்ரா டயர்ஸ் மாட்டு வண்டியும், 2-வது பரிசை கீழ ஈரால் மகாலட்சுமி ஹோட்டல் மணிராஜ் மாட்டு வண்டியும், 3-வது பரிசை கச்சேரி தளவாய்புரம் மதிஷாகுட்டி மாட்டு வண்டியும், 4 பரிசை செவல்பட்டி விக்கிரபாண்டி அய்யனார் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற, 6 மைல் தூரம் சின்ன மாட்டு வண்டி போட்டியில் சீவலப்பேரி துர்க்காம்பிகை மாட்டுவண்டி முதலிடத்தையும், கச்சேரி தளவாய்புரம் ஈஸ்வரன் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு வண்டி மூன்றாவது இடத்தையும், எப்போதும் வென்றான் அம்மன் ஹோட்டல் நந்தகுமார் வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை சுப்புலாபுரம் குரு கார்த்திகேயன், தெய்வப்பிறவி தங்கமுத்து மாரி எப்போதும் வென்றான் வண்டியும், 2-வது பரிசை மணக்கரை நல்லதம்பி மாட்டு வண்டியும், 3வது பரிசை கே.துரைச்சாமிபுரம் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டியும், 4 -வது பரிசை எப்போது வென்றான் முத்துக்காளை மாட்டு வண்டியும் பிடித்தன.
பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மட்டு வண்டி உரிமையாளர்கள் மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது.