கோவில்பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மும்மலைப்பட்டி கிராம மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 10.20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவு நீர் வாறுகால் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஓம் சக்தி நகரில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வாறுகாலுடன் கூடிய பேவர் பிளாக் சாலை ஆகியவற்றையும் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.